மாணவர்

மாணவர்

🔲மாணவர் என்பவர் முதன்மையாக ஒரு பள்ளி அல்லது பிற கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் ஒருவரைக் குறிப்பதாகும்.

🔲ஐக்கிய இராச்சியம் மற்றும் பெரும்பாலான பொதுநலவாய நாடுகளில், மாணவர் என்பது மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மேற்படிப்புகளில் சேர்ந்தவர்களைக் குறிக்கிறது; ஆரம்ப அல்லது தொடக்கப் பள்ளிகளில் சேருபவர்களும் “மாணவர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள்

மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
  • பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல வேண்டும்.
  • காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்
  • .கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை அந்தந்தப் பாட ஆசிரியர்களிடம் நிறைவு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • பாடசாலையின் உடைமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • மாணவர்கள் தமது வகுப்பு அறை மற்றும் பாடசாலை வளாகத்தினைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும்.
  • ஆசிரியர்கள் வகுப்பிற்குள் நுழையும்போது அமைதியாக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.
  • அமைதியாகவும், பணிவாகவும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  • பெற்றோர்கள், ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.
  • தொலைபேசியை எக்காரணம் கொண்டும் பள்ளிக்குச் கொண்டு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்.
  • தலைமையாசிரியர் ,
  • வகுப்பாசிரியரின் அனுமதியில்லாமல் பாடசாலை வேலை நேரத்தில் பாடசாலை வளாகத்தை விட்டு மாணவர்கள் வெளியில் செல்லக் கூடாது.
மாணவர்களின் உரிமைகள்
  • கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை.
  • மனசாட்சியின் சுதந்திரத்தை மதிக்கும் உரிமை
  • அடையாளம்இ ஒருமைப்பாடு, கண்ணியம்- போன்ற அனைத்து அம்சங்களிலும் மதிக்கப்படுவதற்கான உரிமை
  • கல்வியில் சமூக பாதுகாப்புக்கான உரிமை
  • பாடசாலை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான உரிமை
  • மாணவரின் அர்ப்பணிப்பு, முயற்சி மற்றும் செயல்திறன் மதிப்பிடப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கான உரிமை
தற்கால மாணவர்களின் நிலை

◼தற்காலங்களில் மாணவர்களது ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. திரைப்பட கதாநாயகர்களினை முன்னுதாரணமாகக் கொண்டு இன்று பல மாணவர்கள் தங்களுடைய நடை, உடை, பாவனை என்பவற்றினை மாற்றி அமைத்துள்ளனர்.

◼இன்று மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் ஒழுக்க சீர்கேட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு போதைப் பொருள் பாவனை, அதிகமான தொலைபேசி பாவனை போன்றன காரணமாக அமைவதனையும் நாம் காணலாம்.

முடிவுரை

◼நாம் வாழக்கூடிய உலகில் முதுகெலும்பாக காணக்கூடியவர்கள் மாணவ சமுதாயமே. எனவே சிறந்ததொரு மாணவர் சமூகத்தை கட்டி எழுப்புவதற்கு மாணவர்களுக்குரிய ஒழுக்கங்களை முறையாக கற்றுக்கொடுத்தல் அவசியமானதாகும்.

◼அந்த வகையில் மாணவர்களுக்குரிய ஒழுக்கம் தொடர்பான தெளிவினை கற்று கொள்வது ஒவ்வொரு மாணவர்களினதும் கடமையாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்