மனைவி பற்றிய கவிதை

மனைவி பற்றிய கவிதை

மனைவி பற்றிய கவிதை

💟💘💖💗நான் காலை கண் விழிக்கும் போது
எந்தன் காதோரம் உன் மூச்சுக்காற்றின்
வெப்பம் வீச வேண்டும்..

💗ஒரு எச்சில் முத்தத்தோடு காலை தேநீர்
நீ தர வேண்டும்!!!

💗நான் குளிக்கையில் என்னுடன் சேர்ந்து
நீ கொஞ்சம் நனைய வேண்டும்!!!

💗என்னை உன் மார்போடு அனைத்து
தலைதுவட்ட வேண்டும்!!!

💗உன் கையால் உணவு ஊட்டிவிட
வேண்டும்..
நான் மெல்லமாக உன் விரல் கடிக்க
நீ செல்லமாக என்னை அடிக்க
வேண்டும்..

💗உன்னை பிரியாமனமுடன்
நான் வேலைக்கு செல்ல..
நான் மாலை திரும்ப வரும் வரை
எனக்கு தேவையான முத்தங்களை
நீ வழங்க வேண்டும்..

💗உன்னை மயக்க குட்டி குட்டி கவிதைகள்
குறுஞ்செய்தி மூலம் நான் அனுப்ப
உதட்டின் ஓரமாய் புன்னகை வைத்து
உந்தன் உயிரானவனின் வருகைக்காக
நீ காத்திருக்க வேண்டும்..

💗மாலை வந்ததும் உன் மடியில்
நான் விழ வேண்டும்..
நீ என் தலை கோத வேண்டும்..
என் நெற்றியில் ஒரு அழுத்தமான
காதல் முத்தம் நீ பதிக்க வேண்டும்..

💗எனக்காக நீ சமையல் செய்யும்
வேளையில் திடீரென்று
உன்னை பின்னால் இருந்து
கட்டியணைக்க வேண்டும்.
கழுத்தோரம் குட்டி முத்தமிட வேண்டும்.

💗இனிமையான இரவின் நேரம்
நாம் செய்யும்
காதல் சேட்டைகளை கண்டு
நமக்கும் இது போல் ஒரு காதல் துணை
இருந்திருக்கலாம் என்று
அந்த நிலவும் ஆசை கொள்ள வேண்டும்!

💗என் விரல்கள் உன் தேகம்
தீண்டும் போது
கோடி மலர்கள் போல் உன் முகம்
மலர வேண்டும்..

💗உன் உச்சி முதல் பாதம் வரை
கோடி முத்தங்களால் நிரப்பிட வேண்டும்..
உன்னை உச்சநிலைக்கு நான் கொண்டு
செல்ல வேண்டும்..

💗உன் மார்பு சூட்டின் கதகதப்பில் நான்
ஆயுள் முழுவதும் உறங்க வேண்டும்!!!

💗மிண்ணும் உன் வண்ண மேனியை
நாளும் நான் காண வேண்டும்..
நித்தம் நித்தம் உன் நினைவில்
நான் வாழ வேண்டும்..

💗உந்தன் கூந்தல் வாசத்தில்
தினமும் நான் மூழ்க வேண்டும்!!!

💗என் மூச்சு உள்ள வரை உன்னை
காதலிக்க வேண்டும்..
உனக்கு மூச்சு முட்டும்வரை
நான் கட்டியணைக்க வேண்டும்..

💗உன்னிடம் காதல் ரசம்
சொட்ட சொட்ட
நான் பருக வேண்டும்..

💗என் உயிர்போகும் வரை உன் வாசம்
என் மேல் வேண்டும்!!!

💗உன் தோளில் சாய்ந்து கதைகள் பல
பேச வேண்டும்..
உன் ஆசைகள் அனைத்தும் நான் நிறைவேற்ற வேண்டும்..

💗குட்டி குட்டி சண்டை நீ போட வேண்டும்
கெஞ்சி கொஞ்சி நான் சமாதானம்
செய்ய வேண்டும்..

💗சின்ன சின்ன சில்மிஷங்கள்
நான் செய்ய வேண்டும்..
சின்னவிழி கோபம்
நீ கொள்ள வேண்டும்..

💗யாரும் இல்லா வேளையில் உனை
கையில் தூக்கி கொஞ்ச வேண்டும்..
அனைவரும் இருக்கும் வேளையில்
கள்வன் போல் உன் இடை கிள்ள
நீ நாணத்தால் தலைகுனிய வேண்டும்..

💗உன்னை நான் சுமக்க வேண்டும்..
என் உயிரை நீ சுமக்க வேண்டும்..

💗நான் சுவாசிக்கும் காற்றில் எங்கும்
உன் சுவாசம் வேண்டும்..
வாழும் காலம் முழுவதும் உன்னை
காதல் செய்ய வேண்டும்..!

💗இறுதியாக
உன் கண்கள் பார்த்து என்னுயிர்
பிரிய வேண்டும்!!!!

💗கல்லறையிலும் நம் காதல்
வாழ வேண்டும்!!!!

💗இந்த வார்த்தைகள் என் வாழ்க்கையில்
நடக்கும் என ஆசைகொள்பவனாக,💖💝💘💟

மனைவி பற்றிய கவிதை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்