மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மாபெரும் பெட்மின்டன் போட்டி!

அகில இலங்கை ரீதியாக மாபெரும் பெட்மின்டன் போட்டி  மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறுகின்றது.

கிழக்கு மாகாண பெட்மின்டன்  சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பெட்மிட்டன் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு  இன்று வியாழக்கிழமை  காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இன்று வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போட்டி எதிர்வரும்  27ஆம் திகதி வரை நடைபெற்று அன்றைய தினம் இறுதிச்சுற்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.

தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக இடம்பெறும் குறித்த பெட்மின்டன் போட்டிக்கு இம்முறை நாட்டின் பல பாகங்களில் இருந்தும் 487 போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக  போட்டி  ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க