மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு கொக்குவில் பிரதேசத்தில், பொதுமக்களின் வீடுகள், கிணறுகள், சுற்றுப்புற சூழல்கள் என்பன பரிசோதிக்கப்பட்டு உரிய சுகாதார முறையில் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க தவறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன்  தலைமையில், இவ்விஷேட வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ் வாசுதேவன் உட்பட. பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள்,  சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்