மட்டக்களப்பில் வாகன விபத்து: ஒருவர் காயம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நோயாளர் காவு வண்டியும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்து செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் பிரதான வீதியோரம் திருத்த வேலைகளுக்காக தரித்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டி பேருந்தின் பின் பகுதியில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நோயாளர் காவு வண்டியில் பயணித்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்