
போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 777 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 777 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்களில் 31 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையான 8 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 129 கிராம் ஹெரோயின், 231 கிராம் ஐஸ், 195 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்