பொன் அணிகளின் கிரிக்கெட் மற்றும் விவாத சமர் வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

-மட்டக்களப்பு நிருபர்-

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலயத்திற்கும் இடையிலான 29 ஆவது பொன் அணிகளின் சமர் போட்டியில் சிவாநந்த வித்தியாலய பாடசாலை அணியினர் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடந்து 2 ஆவது முறையாகவும் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்திருந்தனர்.

அத்தோடு இம்முறை கிரிக்கெட் சமரை முன்னிட்டு விவாத சமரும் இடம்பெற்றிருந்தது.

இவ் விவாத சமருக்கு வழங்கப்படும் விபுலானந்தர் சவால் கிண்ணத்தினையும் விவாத அணியினர் வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

இவ்விரு சமர்களிலும் வெற்றி பெற்ற சிவானந்தா வித்தியாலய வீரர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜீயின் ஆசியுடன் இராமகிருஷ்ண மிஷனில் இருந்து வீரர்கள் அழைத்து வரப்பட்டு, பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் எஸ்.தயாபரனின் தலைமையில் இடமபெற்றது.

இவ் நிகழ்வில், பிரதி அதிபர்களான எஸ். மதிமோகன், ரி. குலேந்திரகுமார் ஆகியோருடன் பழைய மாணவர் சங்கத் தலைவரும் மண்முனை வடக்குப் பிரதேச செயலாளருமான வ.வாசுதேவன், ஆசிரியர்கள், கல்விக் கல்லூரி விரிவுரையாளர் எஸ்.ஜெயராசா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மாணவர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களுக்கான புத்தக கொள்வனவுக்குரிய பணச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டது .

இதன்போது மாணவர்களோடு, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்