பொதுத் தேர்தல் : அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042 வேட்பாளர்கள், 197 கட்சியின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சை குழுத் தலைவர்கள் தொடர்பான, விசாரணை அறிக்கைகளைத் தயாரிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி குறித்த விடயம் தொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த பிரதிவாதிகள் தொடர்பான தேர்தல் தொகுதிகளுக்கு உட்பட்ட, பொலிஸ் பிரிவுகளின், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்