பெண் வைத்தியர் கொலை: 10 இலட்சம் வைத்தியர்கள் வேலைநிறுத்தம்
இந்தியா – கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் கடமையாற்றிய 31 வயது பெண் பயிற்சி வைத்தியர் ஒருவர் கடந்த 9ஆம் திகதி கடுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 10 இலட்சத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் தேசியளவில் வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக இந்தியா முழுவதிலும் உள்ள வைத்தியசாலை சேவைகள் முற்றாக முடங்கியுள்ள நிலையில் அவசர தேவைகளுக்காக மாத்திரம் வைத்தியர்கள் தமது சேவைகளை வழங்கி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்