நீரில் மூழ்கி இளைஞர் பலி

இந்தியாவில் திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி பகுதியில் உள்ள தலையூற்று அருவியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அழகர் நாயக்கன்பட்டியை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நீச்சல் தெரியாமல் பாறை இடுக்கில் சிக்கி மூச்சுத் திணறி பலியானதாகக் கூறப்படுகிறது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தவரின் உடல் மீட்கப்பட்டு, உடற் கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்