நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு
இந்தியாவில் சென்னை, கொளத்தூரில் உள்ள ப்ளூ சீல் என்ற தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சியின் போது 10 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த வழக்கில், நீச்சல் குளத்தின் உரிமையாளர், பயிற்சியாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார் – ராணி தம்பதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர் ( வயது 10 ) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று நீச்சல் பயிற்சியின்போது நீரில் தத்தளித்ததாக அவரது தாய், பயிற்சியாளரிடம் தெரிவித்தபோது, அப்படி இருந்தால்தான் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறி காப்பாற்றவில்லை எனக்கூறப்படுகிறது.
சிறிது நேரத்தில் குளத்தில் மிதந்தபடி அசைவின்றி இருந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்