நல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகம்: அத்து மீறிய பௌத்த பிக்குகளின் வாகனங்கள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா காரணமாக வாகன போக்குவரத்துகளை தடை செய்யும் வீதி தடைகளையும் மீறி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்பக்கம் வரை அத்துமீறி பௌத்த பிக்குகளின் வாகனங்கள் நேற்று சனிக்கிழமை உள்நுழைந்துள்ளன.

இந்த செயற்பாடானது பக்தர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடமும் இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சைவர்களின் ஆலயத்தில் கூட பிக்குகள் அத்துமீறி வாகனங்களுடன் உள்நுழைந்து, பாதணிகளுடன் ஆலய வளாகத்தில் காலடி வைத்தமை இன மத முரண்பாட்டை தோற்றுவிக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

இவ்வாறான முகம் சுழிக்க வைக்கும் செயற்பாடுகள் இனிமேல் இடம்பெற கூடாது என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்