தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினை: புதிய தொலைபேசி இலக்கம்

தென்னை பயிர்ச்செய்கை தொடர்பான “வெள்ளை ஈ நோய்” உள்ளிட்ட ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் விவசாயிகளுக்கு நேரடியாக அறிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை வழங்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தென்னைச் செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தென்னைச் செய்கை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் இலகுவாக விசாரிப்பதற்கான தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்துவதற்கு தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 1916 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கப்படும் எந்தவொரு பிரச்சினைக்கும் உடனடியாகப் பதிலளிப்பதன் மூலம் பொதுப் பிரச்சினைகளுக்குத் தேவையான பதில்களை வழங்க அதிகாரிகள் தயாராக உள்ளதாக தென்னைச் செய்கை சபையின் தலைவர் பண்டுக வீரசிங்க தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க