ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடி

ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி மற்றும் சட்டத்தரணியாக என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள அந்நபர், ஜேர்மனியில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி 24 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளார்.

கைதானவர் பேலியகொடை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்