ஜனாதிபதியின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி!

வலுவானதும் நிலையானதுமான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட அரசியல் கலாசாரம், மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்குவதற்கு இந்தப் புனித நத்தார் தினத்தில் அனைவரும் உறுதி பூண வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நத்தார் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். பிரிவினையின் இருளிலிருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார்.

அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காகப் பிரஜைகள் என்ற வகையில் அனைவரும் கைகோர்க்க உறுதி பூண வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமது நத்தார் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்