
சகோதரியின் கணவனை கொடுரமாக கொலை செய்த மச்சான்
ஊவா பிரதேசத்தில் சகோதரியின் கணவனை அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்த மச்சானை இன்று வியாழக்கிழமை அதிகாலை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவெல்ல, உனவட்டுன பகுதியைச் சேர்ந்த கனேகொட கமகே ரத்னசிறி (வயது – 54) என்பவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணி புரிந்து வருவதோடு, அவர் மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
உயிரிழந்தவர் நித்திரையில் இருந்த போது மனைவியின் சகோதரன் அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்