க்ளப் வசந்த கொலைச் சம்பவம் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
க்ளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களையும், எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்க மறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 10 சந்தேகநபர்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்