கிண்ணியாவில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
-மூதூர் நிருபர்-
கிண்ணியா பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று புதன்கிழமை கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம் கனி தலைமையில் நடைபெற்றது.
கிண்ணியா மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை, கிண்ணியா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு ஊழியர்களும், திருகோணமலை பொது வைத்திய சாலையின் இரத்த வங்கி பிரிவு ஊழியர்களும் இணைந்து, இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நடாத்தினர்.
கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு, இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்