
கிணற்றிலிருந்து தோட்டாக்கள் மீட்பு
முல்லைத்தீவு தேவபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 992 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கிணறு அமைந்துள்ள காணியின் உரிமையாளர், காணியில் உள்ள பழைய கிணற்றை துப்புரவு செய்யும் போதே குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவை போரின் போது பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்