கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
கறிவேப்பிலையின் மருத்துவ பயன்கள்
🟢கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகைகறிவேப்பிலை இலையாகும். கறிவேம்பு இலை என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. தண்டு மற்றும் கிளைகளின் இடையில் கறிவேப்பிலை இலைகள் கொத்தாக வளர்கின்றன. இதன் பூக்கள் வெண்மை நிறத்திலும் பழங்கள் கருப்பு நிறத்திலும் உள்ளன. இந்தக் கறிவேப்பிலை பார்ப்பதற்கு சிறியத் தோற்றத்தினைக் கொண்டிருந்தாலும் இவற்றில் அதிகமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன.
🍃சக்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையைப் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சக்கiரையின் அளவு சீராக இருக்கும்.
🍃கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதய நோய் பிரச்சினையிலிருந்து பாதுகாப்பு தரும்.
🍃நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையில் அவதிப்படுபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கும்.
🍃கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்தால் முடி நன்றாக வளரும். இதற்குத் தேவையான அளவு கறிவேப்பிலையை எடுத்துஇ அதைச் சுத்தம் பார்த்துஇ அம்மியில் வைத்து தேவையான அளவு இஞ்சி, சீரகம், புளி, பச்சை மிளகாய, உப்பு இவைகளை வைத்து மை போல துவையல் அரைத்து, சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் நாவில் ருசியறியும் தன்மை ஏற்படும்.
🍃சளித் தேக்கத்திலிருந்து நிவாரணம் பெறஇ ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலைப் பொடியுடன் தேன் கலந்து தினமும் இரண்டுவேளை உட்கொண்டு வந்தால்இ உடலில் தேங்கியுள்ள சளி வெளியேறிவிடும்.
🍃கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகன் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
🍃கறிவேப்பிலையை அம்மியில் மை போல அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தின் சாற்றையும் விட்டுக் கலக்கி, தினசரி காலையிலும் மாலையிலும் சாதத்தில் போட்டுக் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் வராது. உடல் உறுதி பெறும். பைத்தியம் தெளிய புத்திசுவாதீனமில்லாமல் இருப்பவர்களின் புத்தியை ஸ்திரப்படுத்தி ஒரு நிலையில் நிறுத்தி, அறிவில் தெளிவை உண்டாக்க கறிவேப்பிலை நன்கு பயன்படும்.
🍃தயிர் மற்றும் கறிவேப்பிலை வயிற்றுப்போக்கிற்கு நல்லது, நீங்கள் தயிர் சாதத்துடன் கறிவேப்பிலை சேர்த்து சாப்பிடலாம் மற்றும் வயிற்றுப்போக்கை குறைக்க உதவும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்