ஊருக்குள் நுழைந்த சுமார் 7 அடி நீளமான முதலை!
-மூதூர் நிருபர்-
மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நுழைந்து, பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் இன்று சனிக்கிழமை காலை விடுவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் ஷாபிநகர் கிராமத்திற்குள் நேற்று மாலை குறித்த முதலை நுழைந்துள்ளது.
இதனை அவதானித்த இளைஞர்கள், குறித்த முதலையை மடக்கி பிடித்திருந்தனர்.
முதலையை இன்று காலை வேதத்தீவு ஆற்றில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.