உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நான்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த குடும்பங்களிற்கு உலர் உணவுப்பொதிகள் பெரேண்டினா நிறுவனத்தினால் வெருகல் பிரதேச செயலாளர் எம். ஏ. அனஸ் தலைமையில் இன்று செவ்வாய் கிழமை பிரதேச செயலக கேட்பார் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இதன் போது வெருகல், வெருகல் முகத்துவாரம், ஆனைத்தீவு, இலங்கைதுறை முகத்துவாரம் போன்ற நான்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த 321 குடும்பங்களுக்கு ரூபா 5000 பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்