
உயிர்த்த ஞாயிறு தினம்
உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
இயேசுவின் துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை நினைவுகூரும் 40 நாட்கள் தவக் காலத்தில் கிறிஸ்தவர்கள் மதக் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தநிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவுகூரும் முகமாக இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் பேராலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில், பிரதான உயிர்த்த ஞாயிறு ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது.
நாடளாவிய ரீதியிலுள்ள தேவாலயங்களில் நேற்று இரவு விசேட வழிபாடுகள் இடம்பெற்றதுடன், இன்றும் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.