இலங்கை கட்டுரை

இலங்கை கட்டுரை

இலங்கை கட்டுரை

🟩பல சுற்றுலாதலங்களை கொண்டு அமைந்த அழகிய தீவு இலங்கையாகும். பண்டைய கலை, கலாசாரங்களுக்கு பெயர் சொல்லும் அளவிற்கு மரபுரிமை கொண்ட  நம் இலங்கை தீவு இன்றும் தனக்கான இடத்தை தனி நாடாகவும் உருவாக்கியுள்ளது.

🟩இலங்கை தீவின் நான்கு பக்கங்களும் இயற்கை அரண்களை கொண்டு அமைந்துள்ளது. நீர், நிலம், மலை, காடு, கடல் என பல நிலப்பரப்புகளை கொண்டு உள்ள நாடு இலங்கையாகும். இலங்கையின் இயற்கை அழகுகிற்கு என பல நாடுகளில் இருந்து பல இன, மொழி ரீதியான மக்கள் சுற்றுலா பயணிகளாக அதிகளவிலான வருகை தருகின்றனர்.

இலங்கை அமைவிடம்

🔻இலங்கை நாடு ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவு ஆகும். இந்து சமுத்திரத்திற்கு மத்தியில் இலங்கை தீவு இருப்பதனால் இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கை அழைக்கப்பட்டது என வரலாறுகள் கூறுகின்றது. இலங்கையின் மொத்த பரப்பளவு அறுபத்தையாயிரத்து அறுநூற்று பத்து சதுர கிலோமீற்றர் ஆகும்.

இலங்கை கட்டுரை
இலங்கை கட்டுரை
இலங்கையின் மறுபெயர்கள்

🔻பண்டைய காலத்தில் வணிக நடவடிகைகளுக்கு சிறப்பு பெற்ற தீவு இலங்கை ஆகும். அவ்வாறான இலங்கை நாட்டிற்கு பல பெயர் கொண்டு பிற நாடுகளால் அழைக்கப்பட்டது. அவைகளாக தப்ரபேன், சிவப்பு தீவு, சிலோன், ஈழம், தம்பன்னி, சீலயி, செரண்டிப் போன்றவற்றைக் குறிப்பிடமுடியும்.

இலங்கையில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

🔻இலங்கை நாட்டுக்கு என தனித்துவமாக இங்கு சுற்றுலா தலங்கள் காணப்படுகின்றன. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்திய பிரதேசம் என அனைத்து திசைகளிலும் இயற்கையாகவே பல விடயங்களை பார்த்து ரசித்து மகிழ்ச்சியான விடுமுறை காலங்களாக கழிக்க உகந்த தீவாக இலங்கை அமைந்துள்ளது.

🔻இங்கு சுற்றுலா தலங்களாக பார்ப்பதற்கு பழமையான தொன்மை வாய்ந்த ஆலயங்கள், கடற்கரைகள், பழமையான கோட்டை கட்டுமானங்கள், இராமன் பாலம், பழைய நூலகம், மலைக்காடு, இயற்கையான திருகோணமலை துறைமுகம், பளிங்கு கடற்கரை, சிவனொலிபாத மலை, ஏழு சுடு நீர் கிணறு, சிவனின் பாத சுவடுகள்,

🔻நீர்வீழ்ச்சிகள், விலங்குகள் சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள், எல்லே பாலம், பதுளை பைனஸ் மலைத்தொடர், விக்டோரியா அணைக்கட்டு, சிங்கராஜ வனம், தேசிய சிங்கராஜ வனம், ஹட்டன் சமவெளி, உலக முடிவிடம், குளங்கள், அருவிகள்,

🔻சிகிரியா, பௌத்த விகாரைகள், தலதாமாளிகை, பழமையான பள்ளி வாசல்கள், தேவாலயங்கள், சிறிய சிறிய தீவுகள், காடுகள், மலைதொடர்கள், தொல்பொருள் ரீதியான ஆவணங்கள் என இன்னும் பல விடயங்களை இலங்கையின் சுற்றுலாதலங்களாக பார்வையிட முடியும்.

இலங்கை கட்டுரை
இலங்கை கட்டுரை
இலங்கை கட்டுரை
இலங்கை கட்டுரை
இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதாரம்

🔻இலங்கை நாடு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. பண்டையகாலத்தில் இருந்து இலங்கை நாட்டின் அரசியலும் பொருளாதாரமும் சிறப்பாக காணப்பட்டது என பிற நாடுகளின் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🔻இலங்கை சுதந்திரமடைந்த பிற்பாடு ஜனநாயக ஆட்சி முறை இலங்கைக்கு வந்தது. அதன் பின் நாட்டுக்குள் இடம்பெற்ற இன போர்கள், கலவரங்கள் என்பவற்றால் இலங்கையின் அரசியலும் பொருளாதாரமும் கேள்வி குறி ஆகிவிட்டன.

🔻இருப்பினும் இலங்கையின் சுற்றுலா துறை மூலமாக நாட்டின் பொருளாதார மற்று அரசியல் நடவடிக்கைகள் செயற்படுகின்றன. நாட்டில் பல பிரச்சனைகள் இருப்பினும் இலங்கையின் இயற்கை அழகை இரசிக்க இன்றளவிலும் பல சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே உள்ளது.

முடிவு

🔻இலங்கை தீவின் அழகையும் அதன் இயற்கையின் வளங்களும் ஏராளம். அவற்றை காண்பதற்கு கண்டிப்பாக ஒரு முறையாவது இலங்கை வர வேண்டும் என்ற எண்ணம் பிறநாட்டவருக்கு இயற்கையாவே எழும். இயற்கையை ரசிப்பவர்களுக்கும் மன அமைதியான சூழலை பெறவும் உகந்த நாடாக இலங்கை காணப்படுகின்றது.

இலங்கை கட்டுரை

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்