இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நில அதிர்வொன்று உணரப்பட்டுள்ளது.

நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியுட்டாக பதிவானதாக ஐரோப்பிய – மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வானது இந்தோனேசியாவின் மாதரத்திற்கு வடக்கே 203 கிலோமீற்றர் தொலைவிலும்இ 516 கிலோமீற்றர் கடல் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.

நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்