Last updated on June 10th, 2024 at 11:11 am

இந்தியா பயணித்தார் ரணில்

இந்தியா பயணித்தார் ரணில்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணித்துள்ளார்.

தனது பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க