அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைந்து இருந்தது. இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தற்காலிகமாக தடை விதித்துள்ளனர்.

மேலும் பழைய குற்றாலம் மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த மூன்று மணிநேரத்திற்கு தென்காசி மாவட்டத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்