அடுக்கு செம்பருத்தி பயன்கள்

அடுக்கு செம்பருத்தி பயன்கள்

🟥செம்பருத்தி மலர் கிழக்கு ஆசியாவை தாயகமாக கொண்டது. மலேஷியா நாட்டின் தேசிய மலர். சீனரோஜா என்றும் அழைக்கப்படுகிறது. செம்பருத்தி செடி இனத்தை சார்ந்தது. இந்தியா இலங்கையில் அதிகம் காணப்படுகிறது. சீனா, பசுபிக் தீவுகளில் உணவாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. பூக்கள் பலநிறங்களிலும், பல அடுக்கு இதழ்களை கொண்ட வகைகளும் காணப்படுகிறது. இவைதவிர கலப்பு பிறபாக்கம் மூலமும் பலநிறங்களில் அழகிய இனங்களை உருவாக்க முடியும். செம்பருத்திக்கு, ஜப்பாத்து செடி, செவ்வரத்தை, ஜபம் என்ற பெயர்களும் உள்ளது. ஜபா புஷ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்று ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பெயர் குறிப்பிடப்படுகிறது.

அடுக்கு செம்பருத்தியின் மருத்துவ பயன்கள்

🌺செம்பருத்தி பூவை தங்க பஸ்பம் என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அதிகளவு மருத்துவ பயன்கள் கொண்டது. செம்பருத்தி செடியில் இலைகள், பூக்கள், வேர் பகுதி அனைத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. இதயநோய்க்கு நல்ல மருந்தாக அமைகிறது. இதய படபடப்பு, வலி, ரத்த குழாய் அடைப்பு போன்றவற்றையும் குணமாக்குகின்றது.

🌺இதய நோய் உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் பூக்களை எடுத்து கொண்டால் இதய நோய் குணமடையும். ஜூஸாகவோ, டீயாகவோ கூட அருந்தலாம். மாதவிடாய் கோளாறுகள், கருப்பை கோளாறுகள், ஒழுங்கற்ற மாதவிடாய், வெள்ளைபடுதல் இதற்கு அருமருந்தாய் திகழ்கிறது.

🌺வயது வந்தும் பருவம் அடையாதவர்களுக்குஇ நெய்யில் பூக்களை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்கள், கர்பப்பை பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படுகின்ற நோய்களுக்கும் மருந்தாகிறது. வயிற்றுபுண் வாய் புண்களுக்கும் தீர்வாக அமைகிறது. ஒருமாத காலத்திற்கு தினமும் பூக்களின் பத்து இதழ்களை சாப்பிட்டு வந்தால் வாய் புண்கள் குணமடையும்.

🌺அஜிரணக்கோளாறுகளை நீக்குகிறது. கொழுப்பின் அளவினை குறைப்பதில் சக்தி வாய்ந்தது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நிச்சயமாக பயன்படுத்த வேண்டும்.

🌺தலைமுடி பிரச்சனைகள், பொடுகு ஈறு பேன் தொல்லை, நரைமுடி, முடி உதிர்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி பூக்களை எண்ணெய்யில் போட்டு காய்ச்சி பயன்படுத்தலாம். செம்பருத்தி பூக்களுடன், வேப்பம் பூக்களையும் அரைத்து தலையில் போட்டுஇ ஊற வைத்து குளித்து வந்தால், பேன் தொல்லை ஒழியும். முடியும் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

🌺செம்பருத்தி பூக்களை பயன்படுத்தி குளியல் சோப்பு, ஷாம்பு வீட்டிலேயே சுலபமாக தயாரித்து பயன்படுத்தலாம். ஆவாரம்பூ, பாசிபருப்பு, கஸ்தூரி மஞ்சள், செம்பருத்தி பூக்கள் கலந்த பொடியினை சோப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம், தோல் நோய்கள் கட்டுபடுவதோடு, தோல் மினுமினுப்பு அடையும். சியக்காயுடன் கலந்து ஷாம்புக்கு பதிலாக பயன்படுத்தலாம். தசைவலியை போக்குவதோடு, தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது.

🌺உடலுக்கு குளிர்ச்சியையும்இமன அமைதியையும் தரக்கூடியது. கண்நோய்கள், சூடு கட்டி, கண் எரிச்சல், கண் நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது. இரத்தசோகை நோயினை குணமாக்கி, ஹூமோகுளோபின் அளவு அதிகரிக்கச் செய்கிறது, ஹூமோகுளோபின் அதிகரிக்க செம்பருத்தி இதழ்களை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து பருகலாம்.

🌺நினைவாற்றல் அதிகரிக்க மகரந்த காம்பை நீக்கிவிட்டு, இதழ்களை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம், உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்