-பதுளை நிருபர்-
பதுளை பகுதியில் உள்ள விஷேட வைத்திய நிபுணர்களின் சேவையை வழங்கும் பிரபல தனியார் மருத்துவமனையொன்றில் காத்திருந்த நோயாளிகளுக்கு வைத்திய நிபுணர் சிகிச்சை வழங்காது மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தனியார் மருத்துவமனையில் வைத்திய நிபுணரிடம் பரிசோதனைக்காக வந்த நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்தி இலக்கங்கள் வழங்கும் போது ஒரே இலக்கம் ஐவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக விஷேட வைத்திய நிபுணரிடம் நோயாளிகள் சிகிச்சை பெற வரிசையில் காத்திருக்கும் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வைத்தியருக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் வைத்திய நிபுணர் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்காது மருத்துவமனையில் இருந்து வெளியேறி சென்றதாக நோயாளிகள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் மருத்துவமனை நிர்வாகம் தமது தவறை ஏற்றுக் கொள்ளாது மருத்துவ பரிசோதனைக்காக செலுத்தப்பட்ட பணத்தை நோயாளிகளுக்கு மீள வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் தூரப் பகுதிகளில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக வந்த பல நோயாளிகள் பாரிய அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே அங்கிருந்து திரும்பி சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்