கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

-மூதூர் நிருபர்-

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மை தன்மை மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரித்தல் எனும் தொணிப் பொருளின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் வதிவிடச் செயலமர்வு மட்டக்களப்பு தனியார் விடுதியில் இன்று புதன் கிழமை ஆரம்பமானது.

இச் செயலமர்வை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.இச்செயலமர்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது இலங்கையின் உள்ளூராட்சி முறைமையும் உள்ளூராட்சி சட்டங்களும் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்