களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதியில், 05 மில்லியன் ரூபா செலவில் 277 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் பணி, இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய வீதி, வழமையாக மழை காலங்களில் பயணிப்பதற்கு சிரமமான நிலையில் மிகவும் பாதிப்படைந்து காணப்படும்.
இந்நிலையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் திட்ட முன்மொழிவுக்கமைய, பி.எஸ்.டி.ஜீ (PSDG) வேலைத்திட்டத்தின் கீழ், 05 மில்லியன் ரூபா செலவில், 277 மீற்றர் நீளமான வடிகான் அமைக்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொது நிர்வாக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்