16 ஆண்டுகளின் பின்னர் மகளிர் அணியின் சாதனை

10

இலங்கை மகளிர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 91 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 276 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி 34.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இதற்கமைய 16 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath