மாடியில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கம்பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹில்லதெனிய பிரதேசத்தில் நேற்று செவ்வாய் கிழமை மாலை வீடொன்றின் முதல் மாடியில் இருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிஹில்லதெனிய, நாரங்விட்ட பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் உயிர் இழந்தமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்