காட்டு யானையின் தாக்குதல்: வாகனங்கள் பலத்த சேதம்

-பதுளை நிருபர்-

பதுளை கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹல ஓய கிராமத்திற்குள் கடந்த சில தினங்களுக்கு முன் உட்புகுந்த காட்டு யானையை காட்டுக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை நேற்றைய தினம் புதன்கிழமை மஹியங்கனை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு இருந்தனர்.

இதன்போது குறித்த காட்டு யானை அகல ஓய கிராமத்தில் இருந்து மைத்திரிகம கிராமத்திற்குள் புகுந்துள்ளது. பின்னர் குறித்த கிராமத்தின் ஊடாக வீதியில் சென்ற லொறி ஒற்றை தாக்கி சேதப்படுத்தியதுடன் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சேதப்பட்டுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த கிராமத்தில் வசிக்கும் மக்களையும் விரட்டி தாக்க முற்பட்டதுடன் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவர்களையும் துரத்தி தாக்க முற்பட்டதாகவும் இருப்பினும் எவருக்கும் காயங்களோ உயிர் சேதங்களோ இல்லை எனவும் கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்