ஹமாஸுடன் போர் தொடரும்: இஸ்ரேல் பிரதமர்

ஹமாஸுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டாலும், போர் தொடரும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்த நிறுத்த யோசனை ஒன்றிற்கு இஸ்ரேல் சம்மதித்திருப்பதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. பாலஸ்தீனத்துடனான யுத்தம் நிறைவடையும் நிலைக்கு வந்திருக்கிறது. எனினும் ஹமாஸுடன் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டாலும் யுத்தம் தொடரும்” என அவர் அறிவித்துள்ளார்.

அதேநேரம், அல்-மவாசி பாதுகாப்பு வலயத்தின் எல்லைக்குள் இஸ்ரேலின் யுத்த தாங்கிகள் நுழைந்திருப்பதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்