வாகன விபத்து: 2 பொலிஸ் உத்தியோகஸ்தர் காயம்

-பதுளை நிருபர்-

பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து விஷேட கடமைகளுக்காக கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த பொச ரஞ்சித் மற்றும் பொகோ ராஜபக் ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர்.

கஹட்டருப்ப பகுதியில் இருந்து ​​பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குறித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர், காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கஹட்டறுப்ப பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டள்ளது.

பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்