கண்டியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்து பேராதனை மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாத்திரை சென்று திரும்பிய எரவ்வல பகுதியை சேர்ந்தவர்களே விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
கண்டி திசையிலிருந்து கொழும்பு திசை நோக்கி பயணித்த இந்த வேன் உயர் மின்னழுத்த தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்