திறமையான பணியாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான ஆராய்வு

வெளிநாட்டு வேலைச் சந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக திறமையான பணியாளர்களை அனுப்புவதற்கான வழிமுறையை ஆராய்வதற்காக ஒரு துணைக் குழுவை நியமிக்க பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) முடிவு செய்துள்ளது.

கோபா தலைவர் எம்.பி கபீர் ஹாசிம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோபா கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

செவிலியர்கள் உட்பட பல துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் இல்லாதது நீண்ட விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொறுப்பு திறமையற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது அல்லஇ ஆனால் வெளிநாட்டு தொழிலாளர் சந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக திறமையான தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான கூட்டு அணுகுமுறையில் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது என்று கோபா குழு  சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், வெளிநாட்டு வேலைகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்புவதற்கான பொறிமுறையை 2 மாதங்களுக்குள் தயார் செய்யுமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளருக்கு குழுத் தலைவர் பணிப்புரை விடுத்தார்.

வெளியுறவு அமைச்சகம், பொது நிர்வாக அமைச்சகம், கல்வி அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

மேலும், இதற்காக கோபா உப குழுவொன்று நியமிக்கப்படும் என கோபாவின் தலைவர் எம்.பி கபீர் ஹாசிம் தெரிவித்தார்.