தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரமடையும்

தமது பிரச்சினைகளுக்கு இன்று புதன் கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள குறைப்பு பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றியம் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் புரவலர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட செயலாளர் சம்பத் உதயங்க, இன்றைய கலந்துரையாடலில் சம்பள வெட்டு தொடர்பான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்வு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த வேலை நிறுத்தத்துடன் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க பொது மாநாட்டின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் குறிப்பிட்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்