அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றி சென்ற இருவர் கைது

-பதுளை நிருபர்-

படல்கும்புரவில் இருந்து பதுளை நோக்கி கொண்டு சென்ற அனுமதியின்றி தேக்கு பலகைகளை ஏற்றிச் சென்ற பொலேரோ ரக லோரியுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

படல்கும்புர பகுதியை சேர்ந்த 24 மற்றும் 27 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியரத்ன ஏகநாயக்கவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய படல்கும்புர பசறை வீதியின் தோலபோவத்த பகுதியில் வைத்து லொறியை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போது 548 அடி தேக்கு பலகைகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக  தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்