காத்தான்குடியிலிருந்து சென்ற லொறி விபத்து

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புணானை பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி நேற்று சனிக்கிழமை விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியிலிருந்து பொலன்னறுவை நோக்கி நெல் மூடைகளை ஏற்றி சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு வழி விடும் போது லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

விபத்தில் லொறிக்கு சேதமேற்பட்டுள்ளதுடன் லொறியில் பயணித்த சாரதியும் உதவியாளரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்