Last updated on June 10th, 2024 at 10:57 am

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் சிரமதானம்

சர்வதேச சமுத்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் சிரமதானம்

சர்வதேச சமுத்திர தினத்தினை முன்னிட்டு அமெரிக்கன் ஐகப் நிறுவனத்தினரினால் கல்லடி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சிரமதான நிகழ்வு ஐகப் நிறுவனத்தின் இணைப்பாளர் என்.சுஜிராஜ் தலைமையில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்றது.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு அமெரிக்கன் ஐகப் (Ihub) நிறுவனத்தின் தன்னார்வ இளைஞர் படையணியினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக கல்லடி கடற்கரை யோரங்களை தூய்மைப்படுத்தும் சிரமதானத்தை மேற்கொண்டனர்.

சில மனித நடவடிக்கையின் காரணமாக கடற்கரையோரங்களில் குப்பைகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுவதாக பல தகவல்கள் சொல்கின்றன. பலரின் வாழ்வாதாரமாகவும், பல உயிர்களின் வாழ்விடமாகவும் இருக்கும் கடலை பாதுகாப்பது அனைவரின் கடமையும் பொறுப்பாகும்.

அமெரிக்கன் ஐகப் (Ihub) நிறுவனத்தின் தன்னார்வ இளைஞர் படையணியினரினால் எதிர்வரும் காலங்களிலும் கடற்கரையோரம் தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க