சிலம்பத்தில் திருகோணமலை சாதனை

-மூதூர் நிருபர்-

உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டி கடந்த சனிக்கிழமை யாழ்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் திருகோணமலை அகரம் மக்கள் கலைக்கூடத்தினை சேர்ந்த 23 சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்று 25 தங்கபதக்கங்களையும், 7 வெள்ளிப்பதக்கங்களையும், 13 வெண்கலப் பதக்கங்களையும் வென்று வெற்றிவாகை சூடினர்.

உலக சிலம்பாட்ட சுற்றுப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, மலேசியா நாடுகளிலிருந்தும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் 380ற்கும் மேற்பட்ட சிலம்பாட்ட மாணவர்கள் பங்கேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அகரம் மக்கள் கலைக்கூடமானது பிரதம சிலம்பாட்ட ஆசான் ராஜஆனந் தலைமையில் திருகோணமலையில் சிலம்பாட்டம், வயலின், புல்லாங்குழல், யோகா, சங்கீதம், நடனம், சித்திரம், நாடகம், கூத்து, பறை, போன்ற கலை வகுப்புகளை லாபநோக்கமின்றி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக பயிற்றுவித்து வருகின்றது.

மேலும் இக்கலைக்கூடத்தில் 300ற்கும் மேலான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்