Sri Lanka Tamil News Site

திடீர் சோதனையில் சிக்கிய இரவுநேர உணவகங்கள்

- Advertisement -

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இரவு நேர ஹோட்டல்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் உணவகங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை உப்புவெளி பிரதேசத்தில் உள்ள இரவு நேர உணவகங்கள் அனைத்தும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

அலஸ்தோட்டம், செல்வநாயகபுரம் மற்றும் மூன்றாம் கட்டை பகுதிகளில் இயங்கி வரும் இரவு நேர உணவகங்கள் சில சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா முடிவடைந்ததையடுத்து திருகோணமலை நகர்ப்புர ஹோட்டல்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் ஹோட்டல்களை சோதனையிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

- Advertisement -