இரண்டு வன்முறைக் கும்பல் தாக்குதல் சம்பவம் : சரணடைந்தவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-

இரண்டு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் தாக்குதல் செய்யத சம்பவத்தை திட்டமிட்ட குற்றச்சாட்டில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் சட்டத்தரணி மூலம் மூவர் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் மூவரும் நேற்று வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் மூவரையும் எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.