தமிழரசு கட்சி பிரிந்து சென்றால் ஏனைய தமிழ் தரப்புக்களை கூட்டமைப்பில் இணைப்போம் என ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் ரெலோவின் செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எமது செய்திச்சேவை அவருடன் தொடர்பு கொண்டு வினவிய போது
- Advertisement -
இலங்கை தமிழரசு கட்சி தனித்து போட்டியிடுமாக இருந்தால், கூட்டமைப்பில உள்ள ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்து பலமான கூட்டணியை உருவாக்குவோம் என தெரிவித்தார்.
மேலும் சி.வி.விக்னேஸ்வரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனப்படும் EPRLF மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளை இணைத்துக் கொண்டு இக்கூட்டணியை உருவாக்கவுள்ளதாகவும் அவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை கூட்டமைப்பில் உள்ள மற்றைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை.
எமது உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமான ஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்றும் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -