நகைக்கடை உரிமையாளரும் பணிபுரியும் யுவதியும் ஒரே நாளில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

 

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைமாடம் ஒன்றின் உரிமையாளரும், அந்த நகைமாடத்தில் பணிபுரியும் பெண்ணும் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வர்த்தக நிறுவனத்தில் கடமை புரியும் 21 வயது யுவதி நேற்று காலை நாவாந்துறையில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் நேற்று பிற்பகல் கொட்டடி பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.