புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்

திருகோணமலை மாவட்ட புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியானது நேற்று திங்கட்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2023.12.02 இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர் III ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பாக இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் எழுத்து மூலம் மற்றும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், ஆட்சேர்ப்பு செய்யும் புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு கிராம உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு ஏற்ப காலாண்டு பயிற்சிநெறியாக இப்பயிற்சி நெறி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

51 புதிய கிராம உத்தியோகத்தர்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஃறூப், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ. அனஸ் மற்றும் புதிய கிராம உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172