தோப்பூரில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

-மூதூர் நிருபர்-

தோப்பூர் – பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு தலைமையில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன்போது தோப்பூரின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான மாட்டு வண்டில் சவாரிப் போட்டி, படகோட்டப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வின் போது சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா,மாவட்ட அரசாங்க அதிபர் ,பொலிஸ் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள்,கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப்போட்டி நிகழ்ச்சிகளை கண்டுகழிக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்