தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் டுபாயிலிருந்து இன்று காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 01 கிலோ 975 கிராம் நிறையுடைய தங்க ஜெல் கரைசல் அடங்கிய 3 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்